சற்று முன்
Home / செய்திகள் / ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க இலங்கை புதிய தந்திரம்!

ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க இலங்கை புதிய தந்திரம்!

கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 30வது அமர்வு தொடங்குவதற்கு முன்னர், குறைந்து மூன்று முக்கிய சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகளை இலங்கை அரசு தயாரித்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு தகவலின்படி, சண்டேலீடர் ஸ்தாபகர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனது, ரக்பி வீரர் தாஜூதீனின் கொலை ஆகிய சம்பவங்கள் தொடர்பாக இந்த அறிக்கைகள் தயாராகிவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்த அறிக்கைகள் வரும் 15ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை ஜெனிவா மாநாடு செப்டம்பர் 14ஆம் தேதியன்று தொடங்க உள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளரால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது இலங்கை குறித்த மூன்று அறிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில் இலங்கை மீது சுமத்தப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அழுத்தங்கள், தாக்கங்கள் குறையும் என்று இலங்கை அரசு எதிர்ப்பார்க்கிறது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com