ஜெகத் ஜெயசூரிய பற்றி சரத் கூறியது தனிப்பட்ட கருத்து! -பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் முன்வைத்த கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரிடமும் உள்ள கருத்து வேறுபாடே இதற்குக் காரணம் எனவும், இதனை ஜனாதிபதி தலையீட்டில் சமரசம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வருவதாக சரத் பொன்சேகா நேற்றையதினம் கூறியிருந்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே ருவன் விபஜேவர்த்தன மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com