ஜுன் மாதமே பட்டதாரிகளுக்கு நியமனம் !

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இம்மாதம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டாலும் எதிர்வரும் ஜுன் மாதமே இவர்களுக்கான நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பட்டதாரிகளை அபிவிருத்தி பணியாளர்களாக இணைத்துக்​கொள்வதுடன், அவர்களுக்கு 2 வருட பயிற்சியும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பயிற்சி காலத்தில் இவர்களுக்கான கொடுப்பனவை வழங்கவுள்ளதுடன், இவர்களை பிரதேசசெயலகங்களில் சேவைகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடுபூராகவும், மாவட்ட மட்டத்தில் பட்டதாரிகள் இணைத்துக்​கொள்ளப்படவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இவர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com