ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு – மாகாணக் கல்வி அமைச்சருக்குப் பிணை !

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமானை அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு அட்டன் நீதவான் நீதிபதி எஸ்.சரவணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் 11.12.2017 அன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக சென்ற வேளையில் அவர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

கடந்த 7ம் திகதி மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சர் திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்தே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ்வரன், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஷ், மற்றும் பிச்சமுத்து, பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

முன்னிலைப்படுத்திய நாவல்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையின் விடுதலை செய்யுமாறும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர், மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட நான்கு பேரையும் எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி (04.04.2018) மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரான ஜீவன் தொண்டமானை அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com