ஜானக பெரேரா கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

ரஷ்யாவின் முன்னாள் தூதுவரும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பிரதான சந்தேகநபரான உமார் ஹாபிதாபியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை, நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஜானக உள்ளிட்ட 31 பேரை, தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திப் படுகொலை செய்ததுடன், மேலும் 60 பேருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்துவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் நேற்று (09) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே, கம்பஹா மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மற்றும் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ரேகா ஸ்வரணாதிபதி கட்டளையிட்டார்.

இதேவேளை, அன்றையதினம் சாட்சி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் உள்ள பழைய பஸ் நிலையத்துக்கு அருகில், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா, 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதியன்று இடம்பெற்றது.

அன்று காலை 8:45 மணியளவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, அவரது மனைவி உட்பட 31 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 60 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com