ஜல்லிக்கட்டை கைவிட வேண்டும் – மாட்டுவண்டிச் சவாரியை தடை செய்ய வேண்டும்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழர் பண்பாடு என உடன்கட்டை ஏறும் வழக்கம், சிறுவயது திருமணம் என்பன இப்போது நடைமுறையில் இல்லை. இதே போன்று மிருகவதையான ஜல்லிக்கட்டையும் நாம் கைவிட வேண்டும். எனத் தெரிவித்துள்ள  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வடக்கில் நடைபெறும் மாட்டு வண்டி சவாரியும் மிருகவதை அதனையும் தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன்னெழுச்சி போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் ஜல்லிக்கட்டு மிருகவதை அதனை ஏற்க முடியாது எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் நான்.

தமிழர் பண்பாடு என உடன்கட்டை ஏறும் வழக்கம், சிறுவயது திருமணம் என்பன இப்போது நடைமுறையில் இல்லை. இதே போன்று மிருகவதையான ஜல்லிக்கட்டையும் நாம் கைவிட வேண்டும்.

இதேவேளை வடக்கில் நடைபெறும் மாட்டு வண்டி சவாரியும் மிருகவதை அதனையும் தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com