ஜல்லிக்கட்டு – நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் – மாணவர்கள் அறிவிப்பு


ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என மாநிலம் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்த தடையை அவசர சட்டம் ஒன்றின் மூலம் தமிழக அரசு நீக்கி உள்ளது.
மேலும், நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முதல்வரே தொடங்கி வைப்பதாக தெரிவித்திருப்பதால் அங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

அலங்காநல்லூர் மட்டுமின்றி அவனியாபுரம், பாலமேடு மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மும்முரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், மாநிலம் முழுக்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈடுபட்டுள்ளோர் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் போராட்டம் நடாத்திவரும் பொதுமக்கள் பலர் கருத்து கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com