ஜல்லிக்கட்டு எழுச்சி, தமிழரின் தன்மானப் புரட்சி – அமைச்சர் மனோ கணேசன்

ஜல்லிக்கட்டு தடையை தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகவே உலகம் முழுக்க வாழும் தமிழர் பார்க்கிறார்கள்.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு தூக்கி எறியும் போதும், அந்த தீர்ப்பு வலியுறுத்தும் தேவைப்பாட்டை எதிர்த்து கர்நாடகத்தில் வன்முறை கலவரம் நடைபெறும் போதும் வராத கோபம், இப்போது ஜல்லிக்கட்டு தீர்ப்பை மாற்றி எழுது என்று அமைதியாக போராடும் தமிழக மாணவ தோழர்களை பார்த்து வருவது எப்படி?
ஜல்லிக்கட்டு எழுச்சி, தமிழரின் தன்மான புரட்சி என்பதை இந்திய அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகளில் மிருக வளர்ப்பு, தோலுக்காக மிருகங்களை வேட்டையாடுவது, தந்தத்துக்காக யானைகளை கொல்வது, பிராணிகளில் நிகழ்த்தப்படும் பரிசோதனைகள் என்ற வரிசையில் ஜல்லிக்கட்டை பார்க்க கூடாது.
அப்படியானால் உலகில் மாமிச உணவை தடை செய்ய வேண்டும். மிருககாட்சிசாலைகளையும் மூடிவிட வேண்டும்.
ஸ்பெயின் நாட்டில் உருவாகி இன்று தென் அமெரிக்க நாடுகளிலும் நடைபெறும் மாட்டுச்சண்டை (BULLFIGHT) என்பதற்கும், ஜல்லிக்கட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை “பீடா” (PETA) போன்ற விலங்குரிமை அமைப்புகள் புரிந்துக்கொண்டு, அவசியமானால் புதிய நெறிமுறைகளை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டை இன்னமும் நெறிப்படுத்தி, காளைகளுக்கு துன்பம் விளைவிக்கப்படக்கூடிய உத்தேச சந்தர்ப்பங்களுக்கு எதிராக முன்னர் உருவாக்கப்பட்ட விதிகளை இன்னமும் நவீனப்படுத்தி அமுல் செய்து, ஜல்லிக்கட்டை அனுமதிப்பதையே இன்று இந்திய அரசு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com