ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் 22.01.2017 அன்று காலை மலையக இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவின் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் மலையகத்தில் மலையக இந்தியவம்சாவளி தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டனர்.

அவசர சட்டமூலம் ஜல்லிகட்டுக்கு ஒப்புதலை பெறுவதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருந்தாலும் அதற்கு மாபெரும் அழுத்தத்தை வழங்கிய மாணவர் படையணியை ஆதரிக்கும் வகையிலும் எவ்வித தடையுமின்றி ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் எனவும் இதன்போது வழியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com