ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கிளிநொச்சியில் நடந்த போராட்டம்

தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு உள்ள தடையை நீக்க கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞா்கள் ஒன்று சோ்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிற்பகல் நான்கு மணிக்கு கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

இதன் போது வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், மோடி அரசே பேடி அரசே, அழிக்காதே அழிக்காதே தமிழர் பண்பாட்டை அழிக்காதே, நீ ஒடுக்குவது விளையாட்டை மாத்திரமல்ல, ஜல்லிக் கட்டை நடத்தவிடு இல்லையே தமிழ்நாட்டை பிரித்துவிடு, இந்திய அரசே ஈழத்தில் மனிதர்கள் கொல்லப்பட்ட போது எங்கே இருந்தாய், தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம் இந்திய ராஜபக்சவே நாம் சிந்திய இரத்தம் போதாதா போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பாதாதைகளை தாங்கியவாறும் போரைாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com