ஜல்லிக்கட்டிற்கு அதரவாக இசைப்புயல் உண்ணாவிரதம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். சிம்பு, விஜய் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வுக்காக நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாய் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் அபிராமி ராமநாதன் பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அனுப்பி உள்ள அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை (20.1.17) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, நடிகர் சங்க வளாகத்தில் தங்கள் உணர்வை வெளிபடுத்தும் வகையில் மௌன அறவழி போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ஆதரவு இளைஞர்களின் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இவரது இந்த அறிவிப்பு, இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com