ஜரோப்பிய ஒன்றிய தடைநீக்கமே தீடீர் புலிப்பூச்சாண்டி காட்டக் காரணம்

விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கம் தொடர்பில் ஜரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளது.இத்தடை நீக்கத்தின் தொடர்ச்சியாக ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அரசியல் ரீதியாகவும் புலிகள் மீதான தடையை நீக்கலாம். அதனை தடுப்பதற்கே மீண்டும் புலிப்பூச்சாண்டியினை காண்பிக்க இலங்கை அரசு முற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார் .
யாழ்.ஊடக அமையத்தில் அவர் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் தெரிவிக்கையில் கொழும்பி ல் பட்டப்பகலில் பகிரங்க கொலைகள் பல நடந்துள்ளன.அப்போதெல்லாம் அங்கு முப்படைகளினையும் அழைக்கும் முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை.ஆனால் வடக்கில் அவ்வாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளமை ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொக்குவில் பகுதியில் இலங்கை காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள இரு இளைஞர்களுமே விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இல்லையென அவர்கள் சார்பினில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டுக்களிற்குள்ளாகின்றார்கள் என்பதை புரியமுடியும்.
இதனால் தான் ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அரசியல் ரீதியாக புலிகள் மீதான தடையை நீக்க முற்படலாமென்ற அச்சத்தினில் மீண்டும் புலிகளது மீள்எழுச்சி தொடர்பாக கதைகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சிலர் திறமை வாய்ந்த நேர்மையான இலங்கை காவல்துறையினரை களமிறக்க சிபார்சு செய்கின்றனர்.ஏற்கனவே வெளிவந்துள்ள பல போர்க்குற்ற சான்று படங்களினில் இலங்கையின் முப்படைகளுடன் இலங்கை காவல்துறையும் கைகோர்த்து நின்றுள்ளமை வெளிப்பட்டுள்ளது.
இதனால் தான் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்க இலங்கையின் நீதித்துறையே காவல்துறையோ பொருத்தமற்றதென ஜநா ஆணையாளர் சுட்டிக்காட்டியதாகவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com