ஜப்பான் நாட்டு பல்கலைகழக மாணவர்கள் மலையகத்தில் கொழுந்து பறிப்பு…

ஜப்பான் நாட்டின் உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அமைச்சு அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவில் 5 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான தேயிலை கொழுந்து கொய்யுதல் தொடர்பான பாடத்திட்டத்திற்கென மலையகத்தில் பத்தனை கெலிவத்தை தோட்டத்தில் மேற்கொண்டனர்.

இலங்கைக்கான சர்வோதய அமைப்பின் ஊடாக இவர்கள் இப்பாட நெறிகளை ஆராய்ச்சியின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய பல்கலைகழக பெண்கள் அமைப்பு 12.09.2016 அன்று இந்த கொழுந்து கொய்யும் பாடநெறிகளில் ஈடுப்பட்டமை கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் வரவேற்க்கதக்க ஒன்றாக அமைந்திருந்தது.

இதன்போது மலையக தோட்ட தொழிலாளர்கள் இன்றைய நிலையில் கொழுந்து கொய்யும் தொழிலில் எவ்வாறு ஈடுப்படுகின்றனர் மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கை நிலையையும் இவர்கள் ஆராய்ந்தமை குறிப்பிடதக்கது.img_0629 img_0643 img_0657 img_0672 img_0700 img_0704 vlcsnap-2016-09-12-11h56m56s153

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com