ஜனாபதிபதியின் உரைக்கு தடை

(கொழும்பு – 17.07.2015)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களிற்கு முன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையினை மீள் ஒளிபரப்புச் செய்ய தேர்தல் ஆணையாளா மஹிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார்.
இந்த உரையை அரச ஊடகங்களில் மீள் ஒளிபரப்புச் செய்வதனால் தமக்கு பாதகத்தன்மை ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிற்கு முறைப்பாடு செய்துள்ளநிலையில் தேர்தல் ஆணையாளர் குறித்த உரையை மீள் ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் என ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த உரையில் அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினை கடுமையாகச் சாடியிருந் நிலையிலேயே குறித்த உரைக்கு எதிராக தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த உரையை மறு ஒளிபரப்புச் செய்வதனை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களுக்கும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது விரோதமாகவோ உரைகளை ஒளிபரப்புச் செய்வது தேர்தல் விதி மீறலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com