ஜனாதிபதி மௌனம் – கலைக்கவேண்டும்

ஜனாபதிபதி மைத்திபால சிறிசேன நிறைவேற்று அதிகர முறையைத் தக்கவைப்பதற்காக அரசியல் அமைப்பு மாற்ற விடயத்தில் மௌனம் காக்கிறாரோ என தாம் சந்தேகம் அடைந்துள்ளதாக ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் தெரிவித்த ஜேவிபி பேச்சாளர் விஜித கேரத் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார ஒழிப்பு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்வேன் எனக் கூறி அதற்கான மக்கள் ஆணை பெற்றே ஜனாபதிபதி மைத்திபால சிறிசேன பதவிக்கு வந்தார். ஆனால் இன்று அவர் மௌனம் சாதிக்கிறார். இந்த விடயத்தில் அவர் தனது உண்மையான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com