ஜனாதிபதி மைத்திரிக்கு “தை 04” தான் நெருக்கடியற்ற கடைசி யாழ்ப்பாண விஜயம் – சிவாஜி எச்சரிக்கை

SAMSUNG CAMERA PICTURES

எதிர்வரும் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வருவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்புக்கள் இல்லாத கடைசி யாழ் விஜயமாக இருக்கும் என எச்சரித்துள்ள ரேலோ இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் ஜனவரி 04 ஆம் திகதிக்குப் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வர விளைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரும் என தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமைத்தில் திங்கட்கிழமை (02) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மகிந்வோடு கூடவே இருந்து அவருடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுகணமே மகிந்தவை ஏமாற்றிவிட்டு வந்ததுபோல நல்லாட்சி எனும் பெயரில் எம்மோடு உறவாடி எம்மையும் ஏமாற்றிவிட்டுச் செல்லக்கூடும் என எமக்கு அவர்மீது ஐயம் எழுகின்றது.

மனாநாயக்க தேரர்களின் ஆசீர்வாத்தோடுதான் அரசியல் தீர்வு என்றால் அவர்களோடே வைத்துக்கொள்ளட்டும் நாம் தேவையில்லை. அப்படியோ ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் தேவையின்றி ஆதரவின்றி வென்றிருக்கலாமே என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com