சற்று முன்
Home / செய்திகள் / ஜனாதிபதி தலைமையில் களுத்துறையில் அவசர கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் களுத்துறையில் அவசர கலந்துரையாடல்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அவசர கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (27)  களுத்துறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உடனேயே ஜனாதிபதி சீரற்ற காலநிலையினால் அனர்த்தத்திற்குள்ளான மக்கள் தொடர்பாக தகவல்களை அறிந்து கொண்டதன் பின்னர், நிவாரண உதவிகள் வழங்குவதில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்தும்வகையில் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அமைச்சர்களான வஜிர அபேவர்தன, ராஜித சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, அஜித் பி. பெரேரா மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, மாகாணசபை அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com