ஜனாதிபதி-எதிர்க்கட்சித்தலைவர் கிழக்கு விஜயம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (010 மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.
ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.  களவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார். ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனும் நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.

இக்கட்டத்தொகுதி இரத்தவங்கி நவீன சத்திரசிகிச்சை கூடம் சட்ட வைத்தியபிரிவு கதிர்வீச்சு பிரிவு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறுவதற்கான வசதி மற்றும் நிர்வாகப்பிரிவு ஆகியன உள்ளடங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கெ. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  அமைச்சர் ராஜித சேனாரத்ன இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com