ஜனாதிபதி அமெரிக்கா பயணம் – ஐ. நா. 71 ஆவது பொதுச் சபை அமர்அமர்வு

maithreeஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (18) அமெரிக்கா பயணமாகிறார்.

பொதுச் சபை அமர்வு எதிர்வரும் 19 முதல் 23 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 194 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 21 ஆம் திகதி அங்கு உரையாற்றுகிறார்.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இரண்டாவது தடவையாக ஐ. நா. அமர்வில் பங்கேற்று உரையாற்ற வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் தலைமையில் இந்த பொதுச் சபை அமர்வு கூடவுள்ளதோடு அவர் பங்குபற்றும் இறுதி பொதுச் சபை அமர்வும் இதுவாகும்.

ஐ. நா. பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பான் கீ மூன் கலந்து கொள்ளும் இறுதி அமர்வும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

விசேட விமானத்திற்கு பதிலாக சாதாரண பயணிகள் விமானத்தில் நியூயோர்க், ஜோன் கெனடி விமான நிலையத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதிக்கு அங்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்த அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை பேரவை பரிந்துரைகளை செயற்படுத்த எடுத்துள்ள திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவிக்கவுள்ளதாக அறிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds