சற்று முன்
Home / செய்திகள் / ஜனாதிபதியின் முகவர் என்ன செய்வார் என எமக்குத் தெரியும் – வடக்கு ஆளுநர் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – சுமந்திரன்

ஜனாதிபதியின் முகவர் என்ன செய்வார் என எமக்குத் தெரியும் – வடக்கு ஆளுநர் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் மக்கள் பிரதிநிதி அல்ல அவர் ஜனாதிபதியின் ஒரு முகவர் அவர் வடக்கு மக்களிடம் கருத்தறிந்து ஜெனீவாவிற்குப் போய் கூறப்போவதாகக் கூறுகிறார். ஒரு சில மக்களிடம் கருத்துக் கேட்டுவிட்டு அவர் ஜெனீவாவிற்குப் போய் என்ன கூறப் போகிறாரோ தெரியவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவனை கடுமையாகச் சாடியிருக்கும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் வடக்கு ஆளுநர் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் ஜனாதிபதியின் முகவரான அவர் ஜனாதிபதி சொல்வதைத்தானே செய்வார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் அமெரிக்கா நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் இலங்கை தொடர்பான விவாதங்கள் குறித்தும் விளக்கமளிப்பதற்காக இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது ஆளுநரின் ஜெனீவாப் பயணம் குறித்து ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்தபோதே சுமந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஜெனிவா செல்வது குறித்து மக்கள் விசனம் கொள்ளத் தேவையில்லை. அவர் எமது மக்களின் பிரதிநிதி அல்ல. அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர். அவர் ஜனாதிபதியின் முகவர். அவர் ஜனாதிபதியின் சொற்கேட்டு ஜனாதிபதியின் சொற்படிதான் நடப்பார்.

இதனால் தான் நாங்கள் ஆளுநரிடமிருந்து அதிகாரங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் பகிருமாறு கோருகின்றோம். முதலமைச்சர்களுடைய மாநாட்டில் கூட ஏழு மாகாணத்தில் முதலமைச்சர்கள் ஆளுநருடைய அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

ஆளுநருடைய அதிகாரங்கள் நீக்கப்பட்டு அவை மக்களிடத்தில் கொடுக்கப்பட வேண்டும் அதனை மக்கள் பிரதிநிதிகள் நிர்வகிக்க வேண்டும். ஜனாதிபதி நியமிக்க ஆளுநர் போன்ற பிரதிநிதிகள் அதனை செய்ய முடியாது.

வடக்கு ஆளுநர் ஜனாதிபதியின் முகவர். அவர் தான் வடக்கு மக்கள் சார்பில் தான் சொல்கிறார் என்று பேசக்கூடாது. அவர் அப்படியே செய்வாராக இருந்தால் நாங்கள் அதற்கு எதிராக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

மக்களைச் சந்தித்து கருத்தறிவதாகக் கூறிவிட்டு ஒருவர் இருவருடன் கதைத்து அவர்களது கருத்துகளை கேட்டுக் கொண்டு போய் அங்கு அவர் என்ன சொல்லப் போகிறாரோ தெரியாது. அவர் மக்களிடம் கேட்பதைவிட மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்க வேண்டும் – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com