ஜனாதிபதியின் இல்லத்தை புனரமைக்க 18 கோடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக 18 கோடி ரூபா செலவிடப்பட உள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக ஆளும் கட்சி நேற்றைய தினம் பாராளுமன்றில் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்கும், அதி சொகுசு வாகன கொள்வனவிற்காகவும் மொத்தமாக 25 கோடி ரூபா குறைநிரப்புப் பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க இந்த யோசனையை சமர்ப்பித்திருந்தார்.

பாராளுமன்றின் அனுமதிக்காக இவ்வாறு குறைநிரப்புப் பிரேணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெஜட் வீதியில் சீ61 மற்றும் சீ62 ஆகிய முகவரிகளில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமே இவ்வாறு புனரமைக்கப்பட உள்ளது.
இல்லத்தின் கட்டமைப்பை புனரமைப்பதற்கும், புதிய கட்டடங்களை நிர்மானிப்பதற்கும் இந்த நிதி தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு பணிகளுக்காக சுமார் ஒன்பதரை கோடி ரூபாவும், கட்டட நிர்மானப் பணிகளுக்காக சுமார் எட்டரை கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவிற்கு அதி நவீன அதி சொகுசு ஆடம்பர வாகனங்களில் ஒன்றான பி.எம். டபிள்யூ ரக கார் ஒன்றும், பி.எம்.டபிள்யூ.ஆர். 1200 ரக மோட்டார் சைக்கிள்கள் 12ஐ கொள்வனவு செய்யவும் ஏழு கோடி ரூபா செலவிடப்பட உள்ளதாக உத்தேச குறைநிரப்புப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com