“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” நிகழ்விற்கு வந்த ஜனாதிபதி போராட்டக்காரர்களைக் கண்டு பாதையை மாற்றி பயணித்தார்

ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போராட்டகார்களை கண்டதும் மாற்று பாதையூடாக வடமாகாண ஆளூநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடமாகாண ஆளூநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க ‘ அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வருகைதந்திருந்தார். அங்கு வருகைதரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை வேலை கோரி பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஆறாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக உள்ள வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு செல்வதற்காக ஜனாதிபதி மாற்றுப் பாதையூடாக உள்நுளைந்து வெளியேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com