ஜனாதிபதித் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கானது எனவேதான் நிபந்தனையற்று ஆதரவு வழங்கினோம் – சுமந்திரன்

(06.08.2015) ஜனவரியில் நடைபெற்ற தேர்தலின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் என்று நாங்கள் கூறியிருக்கவில்லை. அதனால் தான் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் அங்கு ஆட்சிமாற்றத்தை மட்டுமே எதிர்பார்த்து மக்களை வாக்களிக்கக் கோரியதாகவும் அதற்கே மக்கள் வாக்களித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (06.08.2015)  யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீங்கள் ஒவ்வெரு தேர்தலின் போதும் மக்களிடம் ஆணைகேட்பதாக மக்கள் கூறுகின்றார்களே என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அங்கு ஆட்சிமாற்றத்தை மட்டுமே எதிர்பார்த்து மக்களை வாக்களிக்கக் கோரினோம் எனவே தான் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் மக்கள் ஆணையைக் கேட்டுநிற்கின்றோம். நாங்கள் அடிக்கடி ஆணை கேட்கின்றோம் என்று கூறுகின்றார்கள். புதிய சூழலில் புதிய ஆணை தேவைப்படுகின்றது. 44 நாடுகள் கொண்ட சர்வதேச சமூகமும் 2014 இல்தான் அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கொண்டுவரவேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளது. எனவே எமது உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த மக்கள் ஆணை அவசியம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds