சற்று முன்
Home / செய்திகள் / ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தமிழர் தரப்பில் கட்டுப்பணம் செலுத்தினார் சிவாஜிலிங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தமிழர் தரப்பில் கட்டுப்பணம் செலுத்தினார் சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை செலுத்தினார்.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும், எம்.கே.சிவாஜிலிங்கமும் இணைந்தே சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

தமிழப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி சிங்களத் தரப்புடன் பேரம்பேசலில் ஈடுபட மதத் தலைவர்கள் அடங்கிய சுயாதீனக் குழுவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் தனித்தனியாக அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் நேரத்தில் அதிரடியாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதன்போது சிவாஜிலிங்கத்துடன் அனந்தி சசிதரனும் உடடிருந்தாகக் கூறப்பட்டுள்ளது. அனந்தி சசிதரனை தமிழப் பொது வேட்பாளராக களமிறக்க மதத்தலைவர்கள் அடங்கிய தமிழ்ர் சுயாதீனக் குழு முயற்சித்திருந்தது. எனினும் அனந்தி சசிதரனைக் களமிறக்கும் முயற்சியை தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்கும் முயற்சியை சுயாதீனக் குழு கைவிட்டிருந்தது.

இதனையடுத்தே சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com