ஜனவரி 29 உள்ளூராட்சித் தேர்தல் !

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அனே­க­மாக ஜன­வரி 29ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடை­பெ­றும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 27ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வது என்று கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் முடிவு
எடுக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அந்­தத் திக­தி­யில் தேர்­தலை நடத்­து­வ­தில் தேர்­தல் ஆணைக்­கு­ழு­விற்கு உடன்­பா­டில்லை என்று தெரி­ய­வ­ரு­கி­றது.
உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­தல் நடத்­து­வ­தற்­கு­ரிய தடை­கள் எல்­லாம் கடந்த வாரம் நீக்­கப்­பட்டு விட்­டன. இதன் பின்­னர் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வும் கூடிக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­யது. ஜன­வரி மாதம் 20ஆம் திக­திக்­கும் 31ஆம் திக­திக்­கும் இடை­யில் ஓர் நாளில் தேர்­தல் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்று அந்த ஆணைக்­குழு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக
அறி­வித்­தது. எனி­னும் பெரும்­பா­லும் ஜன­வரி 29ஆம் திகதியே தேர்­தல் நடக்­கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்­தல் நடத்­து­வ­தற்­கான திக­தியை அர­சி­யல் தலை­வர்­கள் தீர்­மா­னிப்­பது தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் சுயா­தீ­னத்­தில் தலை­யி­டு­வ­தாக அமை­யும் என்று ஆணைக்­குழு உறுப்­பி­னர்­கள் கரு­து­வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com