ஜனநாயகப் போராட்டங்களிற்கு தயாராகின்றது தமிழர் பிரதேசம் !

இலங்கை அரசு மீதான இன அழிப்புக் குற்றச்சாட்டினை உள்ளக விசாரணைப் பொறிமுறை ஊடாகவே விசாரிக்கப்போவதாக அமெரிக்கா  பிரஸ்தாபித்துள்ள நிலையினில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் அதனூடாக நீதி பெற்றுத்தர வேண்டியும் வடக்கு கிழக்கெங்கும் போராட்டஙை்களை முன்னெடுக்க தமிழ் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்துள்ளன.
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,மாணவர் ஒன்றியம்,சிவில் சமூகம்,பொது அமைப்புக்கள்,அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம்,வெகுஜன அமைப்புக்கள்,காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கம்,உள்ளுர் அமைப்புக்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் இதற்கென களத்தினில் குதித்துள்ளன.

வட-கிழக்கெங்கும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதிவேண்டி போராடும் அமைப்புக்களை கட்டமைப்பது தொடர்பான முதலாவது கூட்டம் இன்று யாழினில் இடம்பெற்றிருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதற்கான அழைப்பினை விடுத்திருந்தது.பதிவு இணையச் செய்தி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரினை தேசிய இணைப்பாளராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ்.மாவட்ட பிரிவிற்கு கலைப்பீடாதிபதி வி.பி.சிவநாதன்,தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இணையச் 
அமைப்பின் உத்தியோக பூர்வ பெயர் அறிமுகம் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டங்கள் தொடர்பினில் நாளை வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் அறிவிக்கப்படவுள்ளது.பதிவு இணையச் செய்தி

இதனிடையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் மக்களது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தும் கையெழுத்து போராட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தினில் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மத தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வினில் பங்கெடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

#LKA #News #TNPF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com