ஜனநாயகத்தையும் ஐக்கியத்தையும் மதிக்கும் அனைவரது கருத்துக்கும் செவிசாய்ப்பேன்

1931755630Janaதான் ஜனநாயகம் மற்றும் ஐக்கியத்தை மதிக்கும் அனைவரது குரலுக்கும் செவிசாய்க்கும் ஜனாதிபதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

முன்னைய ஜனாதிபதிகள் செயற்பட்டது போன்று தன்னால் செயற்பட முடியாது என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

இன்று காலை கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வாதிகார ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டதன் பிரதிபலனாக தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாகவும், தான் தீர்மானங்களை எடுப்பது அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்த்து, நாட்டின் தேவைக்கு ஏற்பவே என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசாங்கம் என்ற வகையில் ஒரு போதும் மக்கள் மீது சுமையை செலுத்த தயாரில்லை என்று கூறிய ஜனாதிபதி, வெட் வரியினூடாக மக்களின் நாளாந்த வாழ்க்கையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com