சோகத்தில் மூழ்கியது குடாநாடு – படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் அறுவர் பலி (2 ஆம் இணைப்பு)

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட    மண்டதீவு கடற்பகுதியில்  இடம்பெற்ற  படகு விபத்தில் 6 மாணவர்கள்  உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று(28) மாலை 2   மணியளவில் மண்டை தீவு    சிறுத்தீவு பகுதி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில்   உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகை எடுத்து    சென்ற  7 மாணவர்களே இவ்வனர்த்தத்திற்கு உள்ளாகினர். அவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ள நிலையில்   ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். மற்றுமொருவரரைக் காணவில்லை என தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இதன் போது   நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள்

நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 ,
நாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17 ,
தனுரதன் (கொக்குவில்) 20 ,
பிரவீன் (நல்லூர்) 20 ,
தினேஷ் (உரும்பிராய்) 17 ,
தனுசன் (சண்டிலிப்பாய்) 18

 யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்ற போது  இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதே வேளை  சுமார் ஐந்து தினங்களுக்கு முன்னர்  இத்தீவுக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள குருசடித்தீவு தேவாலயத்திற்கு நாவாந்துறையிலிருந்து படகில் சென்ற குடும்பமொன்றும் ஆபத்தில் சிக்கியிருந்ததோடு ஒருவர் உயிரிழந்திருந்தார் . இக்கடற்பகுதி ஆழ்கடல் இல்லாவிடினும் தற்போதைய காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் யாழ் போதனா வைத்தியாசலையில் இறந்த மாணவர்களின் உறவினர்கள் பெருமளவில் ஒன்றுகூடியிருந்தனர். இறந்த ஐவரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது ஊர்கள் சோக மாயமாகக் காணப்படுகின்றது. குறித்த மாணவரை்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையில் தோற்றிவரும் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com