சொகுசுமாளிகையில் வாழ்ந்துகொண்டு மக்களுக்கு சேவை வழங்க முடியாது – ஜனாதிபதி மைத்திரி

72e19b58e84209d0c24a3fd6559b5930_Lசாதாரண பொதுமக்களை பிரிந்து சொகுசு மாளிகையில் வாழந்து கொண்டு மக்களுக்கு உரிமையான சேவையினை செய்ய இயலாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா ஆகியவற்றினை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பார்வையிடும் வாய்ப்பு நேற்றிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விழாவில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதன்போது தமது வதிவிடமாக ஜனாதிபதி மாளிகையினை ஏன் தெரிவு செய்யவில்லை என மாணவன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்று(08) முதல் 14 ஆம் திகதி வரை பாடசாலை மாணவார்களுக்கும் பொதுமக்களுக்கும் இம்மாளிகையினை பார்வையிட வாய்ப்பு கிடைக்கின்றது.

29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள் தமது உத்தியோகபூர்வ பணிகளுக்காகவும் வாசஸ்தலமாகவும் உபயோகப்படுத்திக் கொண்ட உத்தியோகபூர்வ இல்லமாகிய கோட்டை ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் பார்வைக்காக வரலாற்றில் முதற் தடவையாக திறந்து வைக்கப்படுகின்றது. புதிய அரசியல் சம்பிரதாயத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் இதுவரை பொதுமக்கள் உட்செல்ல முடியாதவாறு மூடி வைக்கப்பட்டிருந்த அரச மாளிகையின் கதவுகளை பொதுமக்களுக்காக திறந்துவிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி எதிர்காலத்தில் கண்டி மற்றும் நுவரெலியாவில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளையும் பார்வையிடும் வாய்ப்பினை பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுத் தருவதாகக் கூறினார்.
வரலாற்று ரீதியிலான முக்கியத்துவம் மிகுந்த கோட்டை ஜனாதிபதி மாளிகை இந்நாட்டு மக்களின் சொத்து எனவும் ஆகையால் அதனை பார்வையிடும் வாய்ப்பினை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென தீர்மானித்ததாகவும் ஜனாதிபதி கூறினார். இன்று முதல் 14 ஆம் திகதி வரை பிற்பகல் 2.00 முதல் 7.00 மணி வரை ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், 077- 3086366 தொலைபேசி மூலம் ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் விமர்சன சத்துரங்கவுடன் தொடர்பு கொள்வதன் மூலமும் 0714 -241802 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com