சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை இடம்பெறவில்லை – இல்லத் தலைவர் வாகீசத்துக்கு கடிதம்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார்.

மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பான வாகீசம் இணையம் “சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை – ஐவர் மருத்துவமனையில்” எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் மாணவர்களை அதிகாரிகள் எவரும் தாக்கவில்லை என மறுத்திருக்கும் குறித்த சைவச் சிறுவர் இல்லத் தலைவர் சம்பவம் தொடர்பில் விளக்கக் கடிதம் ஒன்றையும் வாகீசத்துக்கு அனுப்பியுள்ளார். அவரது விளக்கக் கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. – ஆசிரியர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com