சைட்­டம் மருத்­து­வக் கல்லூரியை மூட மாட்­டோம்! -லக்ஸ்­மன்

மாலபே சைட்­டம் மருத்­து­வக் கல்­லூ­ரியை நாம் மூட மாட்­டோம். சைட்­டம் பிரச்­சி­னைக்­கான தீர்வை ஜனாதிபதி
மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்வரும் திங்­கட்­கிழமை அறி­விப்­பார். இவ்­வாறு சபை முதல்­வ­ரும் உயர்­கல்வி அமைச்­ச­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஸ் குண­வர்­தன எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

‘‘சைட்­டம் தொடர்­பில் மாண­வர்­கள் தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­ற­னர். அரசு இதற்கு என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது’’ என்று தினேஸ் குண­வர்த்­தன கேள்வி முன்­வைத்­தார்.

‘‘சைட்­டம் மருத்­து­வக் கல்­லூரி தொடர்­பில் மாண­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­னால் அதனை மூடு­மாறே கேட்­கின்­ற­னர். சைட்­டம் பிரச்­சினை தொடர்­பாக இணக்க நிலைக்கு அரசு வந்­துள்­ளது. சைட்­டம் கல்­லு­ரிக்குப் போது­மான தரம் இல்லை என்று கூறி­னர். அதற்­கான நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளோம். நெவில் பெர்­னான்டோ வைத்­தி­ய­சாலை தர­மில்லை என்று கூறி­னர். அதனை நாம் அர­சு­ட­மை­யாக்­கி­யுள்­ளோம். அரசு இணக்க நில­மைக்கு வந்­துள்­ளது. மாண­வர்­களோ, வைத்­தி­யர்­களோ சைட்­டம் கல்­லூ­ரியை மூட­வேண்­டும் என்­ப­தி­லேயே உறு­தி­யாக உள்­ள­னர். இவ்­வாறு செயற்­பட்டு தீர்­வி­னைக் காண முடி­யாது. பல்­க­லைக் கழக பீடா­தி­ப­தி­கள் இணங்­கிச் சென்­றா­லும் அவர்­க­ளை­யும் பின்­னர் திசை திருப்­பு­கின்­ற­னர். இதற்கு முடி­வுகட்டவேண்­டும்’’ என்று பதி­ல­ளித்­தார் அமைச்­சர்.

மகிந்த அணி­யி­னர் கோச­மி­டு­கின்­ற­னர். எனி­னும் சைட்­டம் பிரச்­சி­னைக்கு வித்­திட்­ட­வர்­கள் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளே­யா­வர் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

‘‘மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சி­யின்­போது சைட்­டம் கல்­லூ­ரியை அமைக்க 600 மில்­லி­யன் ரூபா கடன் வழங்­கப்­பட்­டது. உயர்­கல்வி அமைச்­ச­ருக்­குப் பதி­லா­கச் சைட்­டம் தொடர்­பான சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தது தினேஸ் குண­வர்­த­ன­வா­வார்.இதற்­காக அவர் மகா­நா­யக்க தேரர்­க­ளி­டம் மன்­னிப்­புக் கோர­வேண்­டும். மாலபே சைட்­டம் மருத்­து­வக் கல்­லூ­ரியை நாம் மூட மாட்­டோம். சைட்­டம் பிரச்­சி­னைக்­கான தீர்வை ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திங்­கட்­கி­ழமை அறி­விப்­பார்’’ என்று அமைச்­சர் மேலும் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com