சற்று முன்
Home / செய்திகள் / சேவையில் ஈடுபட்டுள்ள அரச பஸ்கள் மீது தாக்குதல்

சேவையில் ஈடுபட்டுள்ள அரச பஸ்கள் மீது தாக்குதல்

1959036169untitled-1தனியார் பஸ்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்கும் நோக்குடன் சேவையை முன்னெடுத்து வரும் அரச பஸ்கள் மீது சில பகுதிகளில் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி கல்கிசை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இவ்வாறு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றின் மீது கற்களை வீசியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதேபோல் திருகோணமலை பகுதியிலும் இரண்டு பஸ்கள் மீது இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து தங்காலை வரை பயணிக்கும் பஸ் ஒன்றின் மீது நேற்று இரவும், மூதுரில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பஸ் ஒன்றின் மீது இன்று காலையும் இவ்வாறு கற்கள் வீசப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதல்கள் குறித்து பொலிஸார் விஷேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, உரிய பாதுகாப்பு வழங்கவும், சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமல் சிறிவர்த்தன சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கோரியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதேவேளை, தங்காலை, ஹேனகடுவ பகுதியில் இன்று அதிகாலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.

மஹரகம டிப்போவுக்கு சொந்தமான கதிர்காமம் தொடக்கம் கொழும்பு வரை பயணிக்கும் பஸ் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இதனால் எவரும் காயமடையவில்லை எனவும் பஸ்சுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கும், இந்தத் தாக்குதலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com