சேர்ட் உள்ளே விட்டு சப்பாத்து அணிந்து வர வேண்டும் – யாழ் பல்கலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடு !!

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கான ஆடை ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மீளவும் எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டு வரபட்ட உள்ளன.
யாழ்.பல்கலைகழகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாக கூட்டத்தில்  பல்கலைகழக நிர்வாகம் அறிமுகப்படுத்திய ஆடை ஒழுங்கு விதிகளை மாணவர்கள் கடைப்பிடிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவிகள் கட்டாயம் சேலை கட்ட வேண்டும் எனவும், ஆண்கள் விரிவுரைக்கு டெனிம் மற்றும் ரி.சேர்ட் உடன் சமூகமளிக்காது சேர்ட் உள்ளே விட்டு சப்பாத்து அணிந்து வர வேண்டும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
கலைப்பீடத்தில் கற்கும் சிங்கள முஸ்லீம் மாணவிகள் தமது கலாச்சார ஆடைகள் அணிந்து வர வேண்டும்.
பல்கலைகழக பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வேலைகளுக்கு செல்லும் போது இவ்வாறாக தான் செல்ல முடியும் எனவே அதனை பல்கலைகழகத்திலையே பழக்கும் விதமாகவே இவ்வாறன நடைமுறை பின்பற்றுவது என தீர்மானிக்க ப்பட்டதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்து உள்ளது.
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி.சேர்ட் அணிந்து விரிவுரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் ,  பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சேலை கட்ட வரவேண்டும் மற்றும் தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளை துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் தீர்மானிக்க ப்பட்டு அதனை நடைமுறைப்படுத்தும் நோக்குடன், அவை தொடர்பான அறிவுறுத்தல் பல்கலைகழக அறிவுறுத்தல் பலகையில் ஒட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து அதற்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது அத்துடன் அது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.
முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் கடும் வாத பிரதிவாதங்கள் முன்வைக்கபட்டன. அதனை தொடர்ந்து பல்கலைகழக நிர்வாகத்தினால் அந்த நடைமுறைகள் வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில் வியாழக்கிழமை கூடிய கலைப்பீட மாணவர் ஒன்றியம் இந்த நடைமுறைகளை பின் பற்றுவது என தீர்மானித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com