சற்று முன்
Home / செய்திகள் / செல்வம் எம்.பிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு..

செல்வம் எம்.பிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு..

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

உகண்டா நாட்டில் நடபெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு பதிலாக குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டுள்ள நிலையில், மாநாடு தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திகுறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் இந்த முறை உகண்டா நாட்டில் நடைபெறுகிறது. பல்வேறு நாட்டு சபாநாயகர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இக்கூட்டத் தொடரிலே அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில், இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினை சம்பந்தமான விடயங்களையும், தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து முடிந்த, நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீதித்துறையின் மீதான தவறான அடாவடி நடவடிக்கைகள் பற்றியும் நேரடியாக எடுத்து விளக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகளிடம் நேரடியாக எடுத்துச்செல்லும் இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நான் நன்கு பயன் படுத்துவேன்.

இதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகள், இன்னும் முடிவுக்கு வராத பிரச்சினைகள் மற்றும் நீராவியடிப் பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை மீறி செயற்பட்டமை என்பன மிகத்தெளிவாக ஒவ்வொரு தலைவர்களிடமும், பிரதிநிதிகளிடமும் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக் கூறியுள்ளேன். இன்னும் பலரிடம் அவர்களை சந்திக்கின்ற பொழுது இந்த விடயங்களை எடுத்துக் கூறுவேன்.

தமிழ் மக்களுடைய பிரச்சினையை நேரடியாகவே தமிழ் மக்களுடைய பிரதிநிதி என்ற வகையிலே அதுவும் வன்னி மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் பங்கு பற்றும் அனைத்து பிரதிநிதிகளிடமும் எடுத்துரைப்பேன். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com