செல்லப்பிள்ளைகள் சண்டை – தலையிட்டு தடுத்தார் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளைகள் என வர்ணிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையில் நேற்று ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பெரும் மோதலாக வெடித்துள்ளது.

தான் உள்வீட்டு ரகசியம் தெரிந்தவன் இந்த அரசு தமிழர்க்கு எதையும் தராது. ஆனால் எல்லாம் கிடைக்கும் என்று சுமந்தினும் சம்பந்தனும் மக்களை ஏமாற்றிவருகின்றனர் என அமைச்சர் மனோகணேசன் அண்மைக்காலமாக கூறிவந்துள்ளார். கடந்த வாரம் சுமந்திரன் அதற்கு கடுமையாகப் பதிலளித்திருந்தார். இந்நிலையிலேயே நேற்றைய நேரடி மோதல் வெடித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன்போதே இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் வாக்குவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதும், வழிநடத்தல் குழுவின் கூட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து விவாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுக்கு தமிழ்க் கட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பான விவகாரத்தில் சுமந்திரனுக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்க் கட்சிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். அதனை நிராகரித்த மனோ கணேசன், முன்மொழியப்பட்ட திருத்தங்களை தமிழ்க் கட்சிகள் எதிர்க்கவில்லை என்று கூறுவதில் தவறு இல்லை என்று வாதிட்டார். இந்த வாக்குவாதம் நீடித்த போது, இருவரையும் அமைதிப்படுத்த தலையீடு செய்த ரணில், இந்த விவகாரத்தை கூட்ட அறைக்கு வெளியே கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறினார். வழிநடத்தல் குழு இன்றும் நாளையும் கூடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com