செலான் வங்கியின் 30 வருடகால வங்கிச் சேவையினை கொண்டாடும் முகமாக விசேட சமய வழிபாடுகள்

வங்கிச் சேவையில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி தனது 30 வருட வங்கிச் சேவையினை கொண்டாடும் முகமாக பல்வேறு சமய வழிபாடுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்து சமய வழிபாடுகள் யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஏப்பிரல் மாதம் 8ஆம் திகதி காலை 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கபில ஆரியரத்ன அவர்களுடன் வங்கி அதிகாரிகளும் வாடிக்கையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

1987ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செலான் வங்கியானது 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு கோட்டையில்; தனது வங்கிச்சேவையை ஆரம்பித்தது. ஆரம்பத்திலிருந்தே, அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில் செலான் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் புரட்சிகரமான வங்கியியல் சேவைகளை வழங்கி வருவதுடன் நாடளாவிய ரீதியில் 167 கிளைகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com