சென்னையிலும் நில அதிர்வு!

ஜம்மு காஷ்மீரில் நில நடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. 

ஆப்கான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இன்று மதியம் 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.

இதன் எதிரொலியால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், உத்தராஞ்சல், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வு சென்னையிலும் உணரப்பட்டது. நந்தனம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் நில அதிர்வு காணப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds