செக்ஸ் என்ற சொல் தேடலில் தொடர்ந்து 5 வருடங்கள் முதலிடம் பிடித்து இலங்கை புதிய சாதனை


கூகிள் தேடுதளத்தில் Sex எனும் சொல்லை தேடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகிள் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த சொல்லை தேடுவதில் கடந்த 5 வருடங்களாக இலங்கை முதலிடம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தரவுகளின் அடிப்படையில், ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் ஆகிய பாடசாலை விடுமுறை விடப்படும் மாதங்களிலேயே குறித்த சொல் அதிகளவில் தேடப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் குறித்த சொல்லை அதிகளவில் தேடும் இடமாக மேல் மாகாணத்திலுள்ள ஹோமாகம இருப்பதாக அத்தகவல் தெரிவிப்பதோடு, அதனை அடுத்து, பூனே, டாக்கா, சென்னை, ஹைதராபாத் ஆகியன இடம்பிடிக்கின்றன.

குறித்த நாடுகளின் பட்டியலில் எத்தியோப்பியா இரண்டாம் இடத்திலும், பங்களாதேஷ், நேபாளம், இந்தியா ஆகியன அடுத்தடுத்த இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சனத்தொகையில் 29.3% ஆனோர் (6,087,164) இணையப் பாவனையாளர்களாக காணப்படுகின்றனர்.

இணைய பாவனையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சீன முதலிடத்திலும் (721,434,547 பேர் – 52.2%) இந்தியா (462,124,989 பேர் – 34.8%), அமெரிக்கா (286,942,362 பேர் – 88.5%) ஆகியன அடுத்தடுத்த இடத்திலும் காணப்படுவதோடு, இலங்கை 57 ஆவது இடத்தில் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com