சூறாவளி ஏற்படும் அபாயம் :வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்காக வங்காள விரிகுடாப் பகுதியில் உருவாகியிருந்த தாழமுக்க வலயமானது ((Low Pressure area)) நேற்றய தினம் திருகோணமலையிலிருந்து கிழக்காக 350 கிலோமீற்றர் தூரத்தில் காணப்பட்டது. தற்போது அது தாழமுக்கமாக ((Low Pressure area)) வலுவடைந்து இன்றய தினமும் (2015.11.08) யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 250 கிலோமீற்றர் காணப்படுகிறது. இதனால் இலங்கைத்தீவின் கிழக்கு மற்றும் வடக்குப் பிராந்தியங்களில் மழை அதிரிக்கும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் வடக்கு கிழக்கு கடல் பிராந்தியங்களிலும் இடையிடையே மழை காணப்படும். பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் நாட்டின் அனேகமான பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை காணப்படும்.இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமானதாக வீசும். பொதுமக்கள் இந்த இடிமின்னல்
தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இலங்கையின் கிழக்காக வங்காள விரிகுடாப் கடல் பகுதியில் தாழமுக்க வலயம் தோன்றியுள்ள காரணத்தினால், தென்கிழக்கு, கிழக்கு மற்றும் வடக்குகிழக்கு கடல் பிராந்தியங்களில் காற்றுடன்கூடிய மழை காணப்படும். அத்துடன் இந்தக் கடல் பிராந்தியங்கள் கொந்களிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும்.
பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஊடான புத்தளம் வரையான வரையான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும்
அபாயகரமானதாகவும் காணப்படும்.
அத்துடன் இக்கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசுவதுடன் ஏனைய கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்
தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com