சற்று முன்
Home / செய்திகள் / “சுவிஸ் மத போதகரை பொலிஸார் பாதுகாத்தனர் ” – வடக்கு ஆளுநர் பகீர் குற்றச்சாட்டு

“சுவிஸ் மத போதகரை பொலிஸார் பாதுகாத்தனர் ” – வடக்கு ஆளுநர் பகீர் குற்றச்சாட்டு

அரியாலையில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தை நடத்திய, சுவிஸிலிருந்து வந்த மதபோதகரை பொலிசாரை பாதுகாத்தனர் என வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம் என்று ஆளுநர் குறிப்பிட்டர். அப்படியானால் சுவிசில் இருந்து வந்த மதபோதகர் பதிவுகளை மேற்கொள்ளாது எப்படி தப்பித்தார் என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் போலீசார் அவரை (சுவிசிலிருந்து வந்த மதபோதகரை) பாதுகாத்தனர் என்று குறிப்பிட்டார். அப்படியாயின் அவரை எப்படி பொலிசார் பாதுகாத்தனர் என்று ஊடகவியலாளர் ஒருவர் மீளக் கேள்வி எழுப்பியபோது, அது விசாரணைகளின் பின்னர் தெரியவரும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை கொரோனா தொற்று தடுப்பு தொடர்பில் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட வடக்கு மாகாணம் சுகாதார பணிப்பாளரை எச்சரிக்கை செய்த பொலிசாரிற்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஆளுநரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் ஜனாதிபதி செயலகத்திற்கு இது தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com