சுரேஸ் ஆதரவு சுயேட்சைக்குழு வல்வெட்டித்துறை நகரசபையில் போட்டி ??

வல்வெட்டித்துறை நகரசபையில் சுயேட்சைக் குழு ஒன்றினை களமிறக்குவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர்விடுதலைக் கூட்டணி முயற்சித்துவருவதாக வல்வெட்டித்துறை பிரதேச மக்கள் எச்சரித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளில் நம்பிக்கை இழந்த நிலையில் பொது அமைப்புக்களைத் திரட்டி சுயேட்சையாகப் போட்டியிடப்போவதாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டதோடு அதற்கென பெரும்தொகைப் பணம் கைமாற்றப்பட்டுள்ளதாகவும் எனினும் வேட்பாளர்களைத் திரட்டுவது முதற்கொண்டு அனைத்து வேலைத்திட்டங்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆதரவாளரான முன்னாள் கல்வி அதிகாரி ஒருவர் தலைமையிலான அணியினரே ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும் சுயேட்சை எனும் பெயரில் வேட்பாளர்களைத் திரட்டிவிட்டு வேட்புமனுத் தாக்கலின் இறுதித் தினமன்று தமிழர்விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு வழக்குவதாக அறிவிக்கச்செய்யும் சதி முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு பல்வேறு சுயேட்சைக் குழுக்களைக் களமிறக்க சில அரசியல் தரப்புக்கள் முயன்றுவருவதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com