சற்று முன்
Home / செய்திகள் / சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் கூட்டத்திலிருந்து வெளியேறினர்

சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் கூட்டத்திலிருந்து வெளியேறினர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளை பொது நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் யாழ் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் 4 ஆம் கட்டமாக இன்றைய தினம் மாலை 6 மணி முதல் நடைபெற்று வந்த கூட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியேறிச் சென்றுள்ளார்.

பிரைட் இன் விருந்தினர் விருந்தினர் விடுதியில் சுமார் இரண்டு மணி நேரமாக காரசாரமான விவாதங்களுடன் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் சுமார் 8 மணியளவில் சுமந்திரன் கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

அதன்போது நேர்காணல் செய்வதற்காக இடைமறித்த ஊடகவியலாளர்களிடம் இந்த கூட்டம் இப்போதைக்கு முடிவதாக இல்லை என்று கூறி வெளியேறிச் சென்றார்.

சுமந்திரனையடுத்து சிவசக்தி ஆனந்தனும் வெளியேறிச் சென்றுள்ளார்.

தற்போது 8.30 மணி தாண்டி கூட்டம் நடைபெற்று வருகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com