சற்று முன்
Home / செய்திகள் / சுமந்திரன் கேட்டதாலேயே கோட்டாபய சந்தித்தார்: பசில் ..

சுமந்திரன் கேட்டதாலேயே கோட்டாபய சந்தித்தார்: பசில் ..

தமிழ் தேசிய 4ட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், கோட்டாபாய ராஜபக்சவும் அண்மையில் இரகசியமாக சந்தித்து பேசியது உண்மைதான். சுமந்திரன் சந்திக்க வேண்டுமென கேட்டதாலேயே அந்த சந்திப்பு நடந்தது.

இவ்வாறு போட்டுடைத்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச.

கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில காலத்தின் முன்னர் அந்த சந்திப்பு நடந்தது. அனைத்து தரப்புடனும் பேச வேண்டுமென்ற திறந்த மனதுடையவர் கோட்டாபய ராஜபக்ச. சந்தித்து பேச வேண்டுமென சுமந்திரன் கோரியிருந்தார். அதனால் கோட்டாபய சந்தித்தார் என தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களிற்கு அதிக பட்ச அதிகாரத்தை பகிர்வதே எமது நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தேவைகள் குறித்து மதிப்பீடுசெய்து கொண்டிருக்கிறோம். தமிழ் மக்களின் தேவைகள் என்ன, அவர்கள் எதனை உடனடியாக எதிர்பார்க்கிறார்கள் போன்ற விடயங்களை தேடி ஆராய்ந்து மதிப்பீடு செய்து வருகிறோம். இது தொடர்பில் நாங்கள் தீர்மானம் எடுக்க மாட்டோம். தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும். அதுவும் ஒரு வகையான அதிகார பரவலாக்கல்தானே.?

ஆனால் இங்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிற்கு ஒரு முக்கியமான விடயத்தை கூற வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் இந்த முறையும் ஏமாற்றமடைய கூடாது. ஒருமுறை எங்களுடன் கைகோருங்கள். எமக்கு அதில் நம்பிக்கை உள்ளது. நீங்கள் அச்சம், சந்தேகம் இன்றி வாழும் சூழலை உருவாக்குவோம்.

வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அபிவிருத்திகள் செய்யப்படும். அனைவரதும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்படும். ஊழல் மோசடி அகற்றப்படும். கடந்த ஆட்சிக்காலத்தில் நாங்கள் விட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். விசேடமாக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனை விடயத்தில் அந்த மக்கள் பேச்சு நடத்த முன்வர வேண்டும். உங்கள் பிரச்சனை உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் ஒரு பக்கத்தில் மறைந்து இருக்க வேண்டாம். நாங்கள் கரங்களை நீட்டியுள்ளோம். அவற்றை பற்றிக்கொள்ளுங்கள். ஒரு கையினால் தட்ட முடியாது.

நான், மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச விரைவில் யாழ்ப்பாணம் செல்வோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை புறக்கணிப்பார் என நம்புகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு, சி.வி.விக்னேஸ்வரன் தரப்புடன் பேச்சு நடத்தும் பொறுப்பு ஜீ.எல்.பீரிசிடம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com