சுமந்திரன் கூறுவது சுத்தப் பொய்

 

வடமராட்சி, மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு மீன்பிடி விசேட முறைகள் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் ஆராய்ச்சியின் பெறுபேறுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்து பொய்யானதென ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பில் ஆய்வாளர்களால் விளக்கமளிக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேத நாயகன் தலைமையில் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தினருடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன்  இத்திட்டம் வடமராட்சி கிழக்கு மீன்பிடி விசேட முறைகள் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் மேற்குறித்த ஆராய்ச்சியின் பெறுபேறுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை இத்திட்டம் பாதிக்கும் என்ற தீர்மானத்துக்கு வரக்கூடியதாக உள்ளது. இச் செயற்பாடு நிச்சயமாக கடற்தொழிலாளரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என திடமாக எமக்கு தெரியவருகிறது.  எனவே மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை முற்று முழுதாக கைவிடுமாறு அரச அதிபருக்கு நாம் அறி வித்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  சுமந்திரனின் இக்கருத்தை முற்றாக நிராகரித்துள்ள ஆய்வாளரான கலாநிதி கே.அருளானந்தம் அவ்வாறு அறிக்கையினில் மீன்பிடி முறைமைகளிற்கு பாதிப்பு ஏற்படுமென தாம் சொல்லியிருக்கவில்லையெனவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இரணைமடு குளத்தில் இருந்து நன்னீர் பெறும் திட்டத்தில் மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அரசியல் செய்ய மாற்றீடாக மருதங்கேணி கடலில் இருந்து நன்னீரை பெறும் திட்டத்தை மேற்கொள்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் முன்மொழிந்திருந்தனர். அதன் அடிப்படையில் குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்கு பௌதிகவியல் சார் காரணிகளை ஆராய்வதற்கு அமெரிக்காவில் இருந்து நிபுணர் குழுவினரை வரவழைத்து ஒரு மாத காலமாக ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் குறித்த பகுதியில் மேற்குறித்த திட்டத்தினை ஆரம்பிக்க முடியும் என்றும் யாழ்.குடாநாட்டுக்கு இலகுவான முறையிலும் விரைவாகவும் குடிநீரை வழங்க முடியும் என்ற அறிக்கை முடிவின் பிரகாரம் மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com