சுமந்திரன் எப்படி? ஏன்? தொலைபேசியில் கதைத்தார் – யாழ் மாவட்டச் செயலகத்தில் களோபரம்

(யாழ் – 13.07.2015) யாழ் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தவேளையில் வேட்பாளர்களிற்கு தொலைபேசி பாவனை மறுக்கப்பட்ட பகுதிக்குள் நின்று தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தைக் கண்ட ஈ.பி.டிபி கட்சியினர் பெரும் களோபரத்தில் ஈடுபட்டனர். இதனால் யாழ் மாவட்டச் செயலகத்தில் சுமார் 10 நிமிங்களிற்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
மாட்டச் செயலகத்தின் உள்நுளையும் அரசியற் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் மேற்கொள்ளும் உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலக  பகுதிக்குள் செல்வதானால் தொலைபேசிகளை வெளியில் கொடுத்துவிட்டு உள்நுளையும் நடைமுறை இருந்துவருகிறது. இன்று நண்பகல் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்றபின் ஆட்சேபனை தெரிவிக்க அரசியற் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. உள்நுளைந்தவர்கள் உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு முன் உள்ள மண்படத்தில் காத்திருந்தனர். அதன்போது தமிழரசுக் கட்சியில் வேட்பாளரான எம்.ஏ.சுமந்திரன் செல்லூலர் தொலைபேசி ஒன்றில் கதைத்துக்கொண்டிருந்தார். அதனை அவதானித்த ஈ.பி.டிபி கட்சியின் வேட்பாளரான தவராசா பெரும் சத்தமிட்டு தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினார். அதன்போது அவரது இணை வேட்பாளர்களும் முனைநாள் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒன்றுதிரண்டு சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளுமாறு உதவித்தேர்தல் ஆணையாளரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு சுமந்திரனுக்கு தொலைபேசி கொண்டுவந்து கொடுத்த அரச உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் களோபரத்தில் ஈடுபட்டனர். 
இதன்போது உத்தியோக பூர்வமாக உதவி ஆணையாளர் அலுவலக தொலைபேசிக்கு தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி  அழைப்பு ஒன்று வந்தது. தமது உத்தரவின் பேரிலே சட்டதிட்டங்களிற்கு உட்பட்டே தமிழ் அரசுக்கட்சியின்  வேட்பாளர் ஒருவரான சுமந்திரனிடம் தொலைபேசி கொடுக்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் செயலகம் சார்பில் விளக்கமளிக்கப்ட்டது.

தோலைபேசி அழைப்பு வந்தமைக்கான காரணத்தையும்  உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.   தேசியப்பட்டியல் தொடர்பிலான விடயம் இன்று 12 மணிக்குள்  தேர்தல் ஆணையாளருக்கு கிடைக்க வேண்டும். அந்தவகையில் விபரம் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டது. எனினும் அதிக தொலைநகல்கள் தேர்தல் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றதால் எந்த தொலைநகல் தமிழ் அரசுக் கட்சியினுடையது என்று பிரித்தறிய முடியவில்லை.   எனவே எந்த இலக்கத்தில் இருந்து தொலைநகல் அனுப்பப்பட்டது என்ற விபரம் தொடர்பிலேயே பேசப்பட்டது என்றும்  தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளாத முன்னாள்  பங்காளிக்கட்சிகள்  பெரும்வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினர் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.    

இச்சம்பவங்களின் பின்னர் ஊடகங்களிற்குக் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் இது சிலரது புரிதலின்மையின் அடிப்படையில் நிகழ்ந்த சம்பவம் எனும் தாங்கள் சட்டதிட்டங்களிற்கு உட்பட்டே நடந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

இதன்போது குழப்பத்தில் ஈடுபட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கைத்தொலைபேசி கொண்டு செல்ல முடியாது  என காட்சிப்படுத்தப்பட்டிருந்த அறிவுத்தல் பிரசுரத்தையும் கிழித்து எறிந்துள்ளார்.  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com