சற்று முன்

சுமந்திரனை படுகொலை செய்யச் சதியாம் !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதிதிட்டமொன்று தீட்டப்பட்டிருந்ததாக, தி ஹிந்து ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

முன்னதாக சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அது குறித்து அவர் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், பிரதமர் செயலகத்தில் இருந்து, இம் மாத ஆரம்பத்தில் தகவல் ஒன்று வழங்கப்பட்டிருந்ததாகவும் இதன் இடிப்படையில் கிளிநொச்சியில் வைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 13ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த சுமந்திரன் இறுதி நேரத்தில் தனது விஜயத்தை இரத்து செய்திருந்ததாகவும் இவ் விடையம் தொடர்பில் குறித்த இந்திய ஊடகம் சுமந்திரனிடம் ஹிந்து ஊடகம் கேள்வி எழுப்பிய போது, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வை இரத்து செய்யவில்லை. இதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. எனினும் குறித்த தினத்தன்று தன்னை கொலை செய்ய முயற்சித்த சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டதாக தான் அறிந்ததாகவும் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சில மாதங்களிற்கு முன்னர் சாவகச்சேரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி சுமந்திரனைக் குறிவைத்தே கொண்டுவரப்பட்டதாகவும் தென்மராட்சியிலுள்ள தனது அலுவலகத்திற்கு சுமந்திரன் அடிக்கடி வந்து செல்வதை சிலர் கண்காணித்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com