சுமந்திரனை படுகொலை செய்ய சதி – சாவகச்சேரி தற்கொலை அங்கிகள் குறித்து சயந்தன் பரபரப்புத் தகவல்

tnaகடந்த சில மாதங்களிற்கு முன்னர் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் படுகொலை செய்வதற்காக கொண்டுவரப்பட்டவை என பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன்  அதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண் ஒருவரைப் பயன்படுத்தி தனது அலுவலகத்திற்கு சுமந்திரன் வந்துசொல்லும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேறு ஒரு இடத்திலிருந்து குறித்த தற்கொலை அங்கிகளைக் கொண்டுவந்த பிரதான சூத்திரதாரியை இன்னும் கைதுசெய்யவில்லை எனவும் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி தொகுதி பணிமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (06.11.2016) நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக, எதிர்க்கட்சித் தலைவரும் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இத் தகவல்களை வெளியிட்டுள்ளார்,

அங்கு உரையாற்றிய அவர்  தெரிவித்ததாவது,

நான் சொல்லப்போகின்ற விடையம் உங்களுக்கு நம்புவதற்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால் அது மிகவும் பாராதூரமான விடையம். இரண்டு விடையங்கள் உள்ளன. ஒன்று கடந்த காலங்களில் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை பாராளுமன்ற உறுப்பினர்களோடு தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் கட்சியில் வந்து சேர்வதற்குக் கேட்கிறார்கள். அவர்கள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தவேண்டியிருக்கின்றது. அதுமாத்திரமல்ல மிக முக்கியமான விடையம் மறவன்புலவில் ஒரு தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டது. அந்தத் தற்கொலை அங்கிக்குப் பின்னால் உள்ள அரசியல் யாருக்கும் தெரியாது. அது விசாரணை நிலையில் இருப்பதால் வெளியில் இன்னமும் வரவில்லை.

ஆனால் ஒரு விடையத்தை மட்டும் நான் சொல்லவிரும்புகின்றேன். அந்த தற்கொலை அங்கிகளை ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு கடத்தியதில் பிரதான சூத்திரதாரி என்று சொல்லப்படுபவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அவர் சாவகச்சேரியிலுள்ள என்னுடைய அலுவலகத்திற்கு நேரே இருக்கின்ற வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த பிள்ளை ஒன்றினைத் தங்கச் செய்து அங்கு தங்கியிருந்துகொண்டு எங்களுடைய கட்சிப் பேச்சாளர் சுமந்திரன் அடிக்கடி வந்துபோகின்ற இடமாக என்னுடைய அலுவலகம் அடையாளம் காணப்பட்டு வேவு பார்க்கப்படிருக்கிறது. இது பொய்யான விடையம் அல்ல. இது உண்மையான விடையம். பாரதூரமான விடையம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com