சுமந்திரனுக்கு பதில் சிறிதரன்…! இனி அவருக்கு பதில் இவரா ?

வடமராட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பல்வேறு நிகழ்வுககளில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் மீதான எதிர்ப்பையடுத்து அந் நிகழ்வுகளில் பங்கு கொள்ளவில்லை.

அந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு பாடசாலைகளில் பிரதம அதிதியாக பங்கு கொள்வதாக தெரிவித்திருந்த போதும் அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றிருந்த வேளையில் அவரது வருகையைக் கண்டித்து சுவரெட்டிகள் ஒட்டப்பட்டதுடன் கிராம மக்கள் ஒன்று திரண்டு பாடசாலை நிகழ்வை பகீஸ்கரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நிகழ்விற்கு சமூகமளிக்கமுடியல்லை என அறிவித்துள்ளார். இதன் பின்னர் பாடசாலை நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பங்குபற்றியிருந்தார்.

ஆனால் பாடசாலையின் அழைப்பிதழ் மற்றும் பத்திரிகை விளம்பரங்களில் எங்கும் சுமந்திரன் கலந்துகொள்வதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் எதிப்பு நடவடிக்கை தொடர்பாக வடமராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குறிப்பிடுகையில் சுமந்திரன் தமிழ்த்தேசிய சிந்தனையை கொச்சைப்படுத்தும் வகையிலும் வடக்கு மாகாண முதல்வரின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையிலும் அண்மைக்காலமாக செயற்பட்டு வருகின்றார்.

அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் சுமந்திரன் அவுஸ்திரேலியாவிலும் எதிர்க்கட்சி தலைவர் டெல்லியிலும் திட்டமிட்டு இருந்தனர். தமிழ் மக்களுக்கு தேவையான தீர்வை பெற்றுத்தர வேண்டி மக்கள் காத்திருக்க தேவையான நேரங்ககளில் மக்களை ஏமாற்றி ஓடி ஒழிப்பதற்காகவா இவர்களை தெரிவுசெய்தோம்-? இப்படிப் பொறுப்பற்ற இவர்கள் எதற்காக பொய்வேசங்களுடன் எம் பிரதேச நிகழ்வுகளில் பங்கு கொள்ளவேண்டும்? இனி வடமராட்சிப் பகுதியில் எந்த ஒரு நிகழ்வுகளிலும் சுமந்திரன் பங்குகொள்ளக்கூடாது இது ஓர் ஆரம்பம் மட்டுமே..” என்று உணர்ச்சிபூர்வமாக தம் கருத்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com