சுமந்திரனுக்கு எதிராக வடமராட்சியில் சுவரொட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுக்கு எதிராக இன்று (19) வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடமராட்சியின் கரவெட்டி , கரவெட்டி பிரதான வைத்தியசாலை , தச்சன் தோப்பு சிந்தாமணி ஆலயம் , சம்பந்தன் கடை ,மற்றும்  கொடிகாமம் வீதி உள்ளிட்ட இடங்களில் சுமந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. 

சிவசிதம்பரத்தை  ஸ்தாபகராகக் கொண்ட  கரவெட்டி மாணிக்க வாசகர்  வித்தியாலயத்தில்  நாளை மறுதினம் [ சனிக்கிழமை ] நடைபெறவுள்ள பாடசாலையின் பரிசளிப்பு விழாவிற்கு  பிரதம விருந்தினராக  பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் செல்லவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்பொருட்டே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


பாரம்பரியம் மிக்க கற்றவர் மண்ணில் அனுமதியோம் ……
 ” தமிழ் தேசத்து உறவுகளே …..
தமிழ் தேசிய சிந்தனையையும்  எங்கள் முதலமைச்சரின்  செயற்பாடுகளையும்  கொச்சைப் படுத்தும் சுமந்திரனை  
முதலமைச்சரே இன்றைய தமிழனின் வழிகாட்டி …
கற்றவர் மண்ணில் நீயா?…. சுமந்திரனே வெளியேறு  …” போன்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதள் ஒன்றின் தலைப்புச் செய்தியை பிரதிசெய்து அதனுடன் சில வாசகங்களையும் சேர்த்து குறித்த சுவரொட்டிகள் காணப்படுகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com