சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என இந்திய புலனாய்வு அமைப்பே தகவல் கசியவிட்டதா ?

சுமந்திரனைக்கொலை செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக இந்திய புலனாய்வு அமைப்பின் உத்தரவின் அடிப்படையில்  யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் ஊடாகவே கொழும்பிலுள்ள இந்திய துணைதூதரகம் மற்றும் இலங்கை பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் வழங்கியதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் இந்த மாதமும் சுமந்திரனை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற இரகசியத்தகவல்களை அடுத்து சுமந்திரனை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மும்முரமாக எடுக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமான இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்திய புலனாய்வு அமைப்பின் உத்தரவின் அடிப்படையிலேயே இத்தகவலை இந்து பத்திரிகைக்கு வழங்கியதும் இந்திய துணைதூதரகமேயென தெரியவந்துள்ளது.

பல்வேறு பணிகளின் நிமிர்த்ததாகவென யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இரகசிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும்   இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வழங்கிய தகவல்களின் அடிப்படையிலலேயே இத் தகவல்கள் வெளியிடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் காலத்தினில் சுமந்திரன் கொலை முயற்சிக்குள்ளாகலாமென இந்திய துணைதூதரகம் எச்சரித்ததையடுத்து அப்போதே இரண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.இவ்வாறு ஏற்கனவே மூன்று தடவைகள் இவ்வாறான எச்சரிக்கையினை இந்திய துணைதூதரகம் விடுத்ததாக சொல்லப்படுகின்றது.

தமிழர்களிற்கான அரைகுறைத் தீர்வு ஒன்றினை திணிப்பதற்காக முயற்சித்துவரும் இந்திய அரசாங்கம் சுமந்திரன் உள்ளிட்டவர்களை தமக்குசார்பாகப் பயன்படுத்தி காரியம் சாதித்துவருவதாக சில தமிழ் அரசியற் தரப்புக்களால் குற்றஞசாட்டப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com